தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்றாவது ஒரு நாள் போட்டியை விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்ததால், ஒருநாள் தொடரில் கடுமையாக போராடி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, இந்தியா தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் படுமோசமாக அடிவாங்கி, 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, சூரியகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர்.
ஆனால்,தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கைக்வாட்டிற்கு (ruturaj gaikwad) வாய்ப்பு இந்த கடைசி போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், இந்த போட்டி மட்டுமில்லாமல் இதற்கு முன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நியூசிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றதும், மூன்றாவது போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த சமயத்திலும் ருதுராஜ் கைக்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேபோல் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நடந்து முடிந்த அனைத்து போட்டிகளிலுமே ருதுராஜ் செம்ம ஃபார்மில் உள்ளார்.
ருதுராஜ் சமீப காலமாகவே சதங்களை அசால்ட்டாக அடித்து விளையாடி வருகிறார். இதனால், அவரது திறமையை பரிசோதிக்க இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
உண்மையில், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும், ஏன் ருதுராஜ் கொடுக்கப்பட வில்லை என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.