8 தோட்டாக்கள் நடிகர் வெற்றியின் திருமணத்தில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்து நம்பிக்கைக்குரிய நடிகராக உருவெடுத்து வருகிறார் வெற்றி. ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியான ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’, கேர் ஆப் காதல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதையடுத்து மெமரீஸ், தீங்கிரை, ஜோதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் வெற்றிக்கு திருமணம் நடைபெற்றது. பிரியா என்பவருடன் வெற்றிக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் வெற்றியின் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தியுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வெற்றி பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஷிவானி இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.