தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி- ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

by Editor News

கேப்டவுன்:

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த மாதம் அங்கு சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.

இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டது. இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியாவின் மிடில்வரிசை பேட்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறினார். இந்திய பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு மட்டுமே ஓரளவு எடுபடுகிறது. புவனேஷ்வர்குமார், அஸ்வினின் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி இல்லை.

இதனால் இன்றைய போட்டியில் தீபக் சாஹர், முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை சேர்ப்பது குறித்து அணி நி்ாவாகம் பரிசீலித்து வருகிறது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்த இந்தியா இன்று ஆறுதல் வெற்றியாவது பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment