ஒமிக்ரோன் துணை மாறுபாடு இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

by Column Editor

இங்கிலாந்தில் புதிய ஓமிக்ரோன் துணை மாறுபாட்டின் 400க்கும் மேற்பட்ட தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் முழு ஜீனோம் சீக்வென்சிங் மூலம் 426 ஒமிக்ரோன் பிஏ.2 நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத் தலைவர்கள் இதை விசாரணையில் உள்ள மாறுபாடு என அழைக்கின்றனர்.

லண்டன் (146) மற்றும் தென்கிழக்கு (97) ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் உள்ளன.

பிஏ.1 எனப்படும் ஆதிக்கம் செலுத்தும் ஓமிக்ரோன் விகாரத்தை விட இந்த மாறுபாடு வேகமாக பரவக்கூடும் என்று ஆரம்பகால ஆராய்ச்சி கூறுகிறது, ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய உறுதியான நிலை குறைவாக இருப்பதாக வலியுறுத்துகின்றனர்.

துணை மாறுபாடு பற்றி மேலும் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இது பற்றி இந்த கட்டத்தில் அதிகம் அறியப்படவில்லை.

பிஏ.2 முதலில் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. நவம்பர் நடுப்பகுதியில் இருந்து இதுவரை 40 நாடுகள் மொத்தம் 8,040 பிஏ.2 தொற்றுகளை பதிவு செய்துள்ளன.

முதலாவதாக பிலிப்பைன்ஸில் உறுதிசெய்யப்பட்டது. மேலும் 6,411 தொற்றுகள் கண்டறியப்பட்ட டென்மார்க்கில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்தியா (530), சுவீடன் (181), மற்றும் சிங்கப்பூர் (127) ஆகியவை 100 க்கும் மேற்பட்ட தொற்றுகளை பதிவுசெய்த பிற நாடுகள் ஆகும்.
பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம், புதிய பிறழ்வுகள் தோன்றுவது எதிர்பாராதது அல்ல என்று கூறுகிறது.

பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகத்தின் கொவிட் சம்பவ இயக்குநர் டாக்டர் மீரா சந்த் இதுகுறித்து கூறுகையில்,
‘வைரஸ்கள் பரிணாமம் மற்றும் மாற்றமடைவது இயல்பு, எனவே தொற்றுநோய் தொடரும்போது புதிய மாறுபாடுகள் வெளிவருவதை நாம் தொடர்ந்து பார்ப்போம் என்று எதிர்பார்க்கலாம்’ என கூறினார்.

Related Posts

Leave a Comment