அருமையானஉருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெசிபி செய்வது எப்படி?

by Column Editor

நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு 4 நடுத்தர அளவு
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
எலுமிச்சை -1
தேவையான உப்பு
எண்ணெய் 2 ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 2 ஸ்பூன்
கடலை பருப்பு -2 ஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
இஞ்சி- 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 1-2 (பொடியாக நறுக்கியது)
கறி வேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

உருளைக்கிழங்கு நன்றாக மிருதுவாகும் வரை பிரஷர் குக்கரில் வைத்து வேக வைக்கவும். அதன் தோலை உரித்து, மசித்து ஓரமாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும். இதில் கடுகைச் சேர்த்து, அது வெடிக்கும்போது, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து, பருப்புகள் லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்.

பின்னர் ஒரு சில நொடிகள் வதக்கி, உருளைக்கிழங்குகளை அதில் சேர்க்கவும். தேவைப்பட்டால் உப்பை சேர்க்கவும். நன்றாக கலக்கி, தீயை குறைக்கவும். இறுதியில் எலுமிச்சையைப் பிழிந்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும். இப்போது உருளைகிழங்கு பொடிமாஸ் ரெடி…

Related Posts

Leave a Comment