அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,708 கோடி ஈட்டியுள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு சொந்தமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,708 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 7.8 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,584 கோடி ஈட்டியிருந்தது.
2021 டிசம்பர் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.12,985 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 5.89 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.12,262 கோடி ஈட்டியிருந்தது.
அல்ட்ராக்டெக் சிமெண்ட் நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில் ரூ.3,459 கோடி கடனை திருப்பிச் செலுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.83 சதவீதம் குறைந்து ரூ.7,566.25ஆக இருந்தது.