கேரளாவில் கொரோனா பரவல் எதிரொலியால் முதல்வர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அசுர வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 946 பேருக்கு கொரோனா உற்உதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு தினசரி தொற்று பாதிப்பு நேற்றுதான் 22 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. அங்கு தொற்று பரவல் விகிதம் 33 % ஆக உயர்ந்துள்ளது. அதிலும் முதல் முறையாக கேரளாவில் மாவட்டங்களில் திருவனந்தபுரத்தில் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. அங்கு 5,863 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புதிதாக 63 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை 591 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்க் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கேரள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. முதல்வர் அலுவலக ஊழியர்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுஜ்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் , இன்று முதவர் அலுவலகம் மூடப்பட்டது.
குறைந்த எண்ணிக்கையில் மிக முக்கிய அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்துள்ளதாகவும், வேறு யாரும் தலைமைச் செயலகம் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் தலைமை செயலகத்திலுள்ள மத்திய நூலகமும் மூடப்பட்டிருக்கிறது.