கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது.
கடந்த வாரம் பொங்கல் பண்டிகை ஆக இருந்ததால் மெகா தடுப்பூசி முகாம் செயல்படவில்லை. மெகா தடுப்பூசி முகாம் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. இதனிடையே தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்தாலும், கொரோனா தடுப்பூசி அதிகமானோர் எடுத்து கொண்டுள்ளதால் உயிரிழப்புகள் குறைந்த அளவில் ஏற்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சனிக்கிழமைகளில் வழக்கம் போல தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.