அரம்போள் பீச் – தனிமை சொர்க்கம்!

by Editor News

அரம்போள் பீச், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு அருகில் இருந்தாலும், அந்த கடற்கரைகளை போல் வணிகமயமாக்கலின் சாயம் படிந்ததல்ல. இந்தக் கடற்கரையும், இதைச் சார்ந்து முற்றிலும் தூய நீரினால் அமையப்பெற்ற ஏரியும் எளிமையின் உருவமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற கடற்கரைகளை போல இங்கு நீங்கள் ஹோட்டல்களையோ, உணவகங்களையோ பார்க்க முடியாது.

எனினும் ஆங்காங்கு காணப்படும் குடில்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து விடும். அஞ்சுனா மற்றும் மாபுஸா கடற்கரைகள் அரம்போள் பீச்சுக்கு மிக அருகிலேயே இருக்கின்றன. மேலும், அரம்போள் பீச்சின் அருகாமை பகுதிகளில் உள்ள மணி ஸ்டோன் என்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

அரம்போள் பீச்சில் பரபரப்புக்கு எப்போதும் வேலையே கிடையாது. இதன் காரணமாகவே காலாற நடந்துலாவும் இன்பத்தை அனுபவிக்க இந்த கடற்கரைக்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வருகிறார்கள். மேலும், பனாஜியிலிருந்து, மாபுஸா செல்லும் பேருந்துகளின் மூலம் நீங்கள் சுலபமாக அரம்போள் பீச்சை அடையலாம். அதுமட்டுமல்லாமல் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப வாடகை கார்களிலேயோ, ஆட்டோ ரிக்ஷாக்களிலேயோ அரம்போள் பீச்சுக்கு செல்லலாம்.

Related Posts

Leave a Comment