உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மீதான அச்சம் குறையாத நிலையில் பிரித்தானியா ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது.
2019ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா, தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது, தற்போது ஓமிக்ரான் மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
எனவே ஒவ்வொரு நாடும், தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காற்றில் கலந்த 20 நிமிடங்களில் அதன் பரவும் தன்மையை இழந்துவிடுவதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிஸ்டால் பல்கலைகழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மூச்சு காற்றில் இருந்து வெளியேறும் வைரஸ், முதல் 5 நிமிடங்களில் அதன் பரவும் குறைகிறது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் அதன் பரவும் தன்மை குறைந்துவிடுகிறது, எனவே தனி மனித இடைவெளியை பின்பற்றுவது வைரஸ் பரவுவதில் இருந்து பெரும் பாதுகாப்பை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.