கபடி ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் ப்ரோ கபடி லீக் போட்டியின் 8வது சீசன் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தப் போட்டிகள் உள்ளரங்கில் நடத்தப்படுகின்றன.
ப்ரோ கபடி லீக் சீசன் 8 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. யோத்தா பெங்களூரு புல்சையும், புனேரி பல்தான் பெங்கால் வாரியர்ஸையும் வென்றன.
கபடி ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் ப்ரோ கபடி லீக் போட்டியின் 8வது சீசன் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தப் போட்டிகள் உள்ளரங்கில் நடத்தப்படுகின்றன. ஓடிடி மற்றும் டிவி சேனல்களில் இந்த போட்டிகளை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இதன் பார்வையாளர்கள் அதிகரித்து வருவது, கபடி போட்டிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை உணர்த்துவதாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய லீக் ஆட்டத்தில் உ.பி. யோத்தா அணி பெங்களூரு புல்சை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி பெங்களரு புல்சை 42-27 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இதேபோன்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி பெங்களூரு வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே புனேரி பல்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்ட நேர இறுதியில் 39-27 என்ற கணக்கில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.
ப்ரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி நடப்பு சாம்பியனாக உள்ளது. அந்த அணி தொடர்ந்து தடுமாறி வந்த புனேரி பல்தானிடம் தோல்வியடைந்திருப்பது கபடி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணியின் கேப்டன் மனிந்தர் சிங், ஆல்ரவுண்டர் முகம்மது நபிபக்ஸ் ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தை இன்றைய போட்டியில் வெளிப்படுத்த தவறினர்.
இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அரியானா ஸ்டீலர்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி தபாங் டெல்லியையும் எதிர்கொள்கின்றன.