பச்சை பட்டாணி குருமா செய்வது எப்படி?

by Editor News

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 3
தக்காளி – 4
பச்சைமிளகாய் – 4
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் பால் முதல் பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

கொத்தமல்லி, ப.மிளகாயை அரைத்து கொள்ளவும்.

2 தக்காளியை மட்டும் அரைத்து கொள்ளவும்.

மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை சோம்பு, லவங்கம் தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெட்டி வைத்த தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும அரைத்து வைத்த தக்காளி போட வேண்டும்.

அரைத்த கொத்தமல்லி விழுதை போட்டு கொதிக்க விடவும்.

பின் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி ..

Related Posts

Leave a Comment