தொடர் சரிவில் தங்கம் விலை…

by Column Editor

கொரோனா தொற்று அதிகரிப்பால் தங்கம் விலை தற்போது சரிவில் சென்றுக்கொண்டிருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால், அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ. 4486- க்கு விற்பனையானது.

மேலும், பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ. 35888-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38816- க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் விலை 50 பைசா குறைந்து ரூ. 65.40-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 65,700 ஆக உள்ளது.

இலங்கையில், நேற்றைய விலைப்படி தங்கத்தில், 22 காரட் 1 கிராம் Rs.11,880.00 க்கும் 22 காரட் 8 கிராம், 1 பவுன் Rs.95,000.00 விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment