கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவின் இரண்டு பெரிய நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தம் ஒன்பது வழித்தடங்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடையில் திருத்தப்பட்ட கால அட்டவணையில் செயற்படும்.
அதே நேரத்தில் எடின்பர்க் வேவர்லிக்கு மற்றும் அங்கிருந்து வரும் மூன்று வழிகளும் தற்காலிகமாக குறைக்கப்படுகின்றன.
ஸ்கொட்லாந்தின் பரபரப்பான சேவையான கிளாஸ்கோவிலிருந்து எடின்பர்க் வரை பால்கிர்க் ஹை வழியாக, மாற்றங்களால் பாதிக்கப்படவில்லை. இது முக்கியமாக மத்திய பெல்ட்டில் உள்ள பாதைகள் பாதிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பல சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எந்த ரயில்கள் இயங்குகின்றன என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு உறுதியான நிலையை வழங்க, ஜனவரி 28ஆம் திகதி வரை தற்காலிக கால அட்டவணை அமுலில் இருக்கும்.