கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்டுப்பாடுகளை தீவிரமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழலில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் செல்ல சென்னை மாநகராட்சி இன்று முதல் தடை விதித்துள்ளது.
இருப்பினும் நடை பாதையில் செல்ல பிரத்யேகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செல்லும் பொது மக்களும் கடற்கரைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.