தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஜாம்பவான வடிவேலு அண்மையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். ஓமிக்ரோன் பரவல் அதிகமுள்ள பிரிட்டன் நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் விதிகள் படி பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன்படி அவருக்கு கடந்த 23-ம் தேதியில் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை நடந்துள்ளது. பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்ததால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே தற்போது சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்து வடிவேலு வீடு திரும்பினார். இதுகுறித்து பேசிய வடிவேலு, “மக்கள் ஆசீர்வாதத்தால் கொரோனாவிலிருந்து மீண்டு நான் நலமாக உள்ளேன், மூன்று நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் இருந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் என்னிடம் நலம் விசாரித்தனர். நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு நன்றி என்று தெரிவித்தார்.