தங்கத்தின் மீதான முதலீடு என்பது என்றைக்குமே சிறந்த சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே தங்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. அதிலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம் என்றும் தங்கத்தை ஒரு சேமிப்பாக கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல் நாட்டிலுள்ள பிற நகரங்களைக் காட்டிலும், சென்னையில் தான் தங்க வர்த்தம் அதிகம் நடக்கிறது.
சென்னையை பொறுத்தவரை தீபாவளிக்குப் பிறகு தங்கம் விலை கொஞ்சம் குறைந்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,502 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,525 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை நேற்று ரூ.36,016 ஆக இருந்தது. இன்று ரூ.184 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.36 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் நேற்று கிராமுக்கு ரூ.65.50 ஆக இருந்த வெள்ளி விலை இன்று 10 காசுகள் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.65.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 10 கிலோ வெள்ளி ரூ.65,400 க்கு விற்பனையாகிறது.