பாவனியை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது யுக்தியா ?…. க்ரீன் லைட் காட்டிய அமீர் !

by Column Editor

அபினய் விஷயத்தில் பாவனியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அமீர் கேம் விளையாடியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டிக்கு செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். மொத்தமுள்ள 8 போட்டியாளர்களில் மற்றவர்கள் வெளியேறிய நிலையில் சிபி, அமீர், சஞ்சீவ் ஆகிய மூவர் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர். இந்த போரில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அந்த நபர் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்ல உள்ளார்.

இந்நிலையில் இந்த டாஸ்க்கில் அமீர் விளையாடி வருகிறார். அது குறித்த ப்ரோமோதான் வெளியாகியுள்ளது. அதில் தன்னை அபினய் விஷயத்தில் பயன்படுத்தியிருக்கிறார் அமீர் என்று பாவனி கேள்வி கேட்கிறார். அப்போது அருகில் இருந்த ராஜூ, வேற ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்க என கேட்க, அதற்கு என் இஷ்டம் என்கிறார் பாவனி. இதையடுத்து பேசும் பிரியங்கா, பாவனியுடன் நெருக்கமானது, வைல்டு கார்டில் வந்ததால், பாவனி பெயரை ஒரு யுக்தி பயன்படுத்தி இருக்கிறாய் என அமீரிடம் கேள்வி எழுப்புகிறார்.

பிரியங்காவின் இந்தக் கேள்விக்கு உங்களின் பதில் என்ன என்று அமீரிடம் பிக் பாஸ் கேட்கிறார். அதற்கு அமீர் கிரீன் லைட்டை காட்டும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இன்றைய எபிசோடை முழுமையாக பார்த்தால் தான் என்ன நடந்தது என்று தெரியும். ஆனால் அமீர் கிரீன் லைட்டை காட்டியிருப்பது பிரியங்காவின் கேள்விக்கு ஆம் என்று சொல்வதுபோல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment