வடக்கு அயர்லாந்தில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக பி.சி.ஆர். சோதனைகளுக்கான தேவை அதிகரிப்பதைச் சமாளிக்க புதிய கொவிட்-19 சோதனை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தேவையான போது மட்டுமே பி.சி.ஆர். சோதனைகளை பதிவு செய்யுமாறு பொது சுகாதார நிறுவனம், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், வைரஸால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடுப்பூசி போடப்படாதவர்கள் தொடர்ந்து 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், அறிகுறிகளைக் காண்பிப்பவர்கள் கூடிய விரைவில் பி.சி.ஆர். பரிசோதனையை பதிவு செய்ய வேண்டும் என்று பொது சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியின் நெருங்கிய தொடர்புகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும், சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனையைப் பெறுமாறு கூறப்பட்டது.
பொது சுகாதார நிறுவன படி, இந்த வாரம் வடக்கு அயர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பி.சி.ஆர். சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 27ஆம் திகதி மட்டும் 21,000க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் கூறியது.