‘ரைட்டர்’ படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு… வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர்!

by Column Editor

ரைட்டர் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து படக்குழுவினர் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

அறிமுக இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் ரைட்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. இனியா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

ரைட்டர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காவல்துறையில் இதுவரை காண்பிக்கப்படாத கதைக்களத்தை படம் கொண்டுள்ளது. அந்தத் துரையின் இரு பக்கங்களும் படத்தில் சமரசம் இல்லாமல் காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ரைட்டர் படக்குழுவினர் கேக் வெட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். அதில் இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment