432
பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று காலை அவரது பண்ணை வீட்டில் இருந்தபோது அவரை பாம்பு கடித்திருக்கிறது. அவரது கையில் பாம்பு கடித்த நிலையில் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.
சல்மானுக்கு நாளை திங்கட்கிழமை பிறந்தநாள் என்பதால் அவர் குடும்பத்துடன் பண்ணை வீட்டில் இருந்தார். அங்கு கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. பான்வெல் என்னும் இடத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் தான் அவர்கள் இருந்தனர்.
சல்மானை கடித்த பாம்பு விஷம் இல்லாதது என்பதால் அவர் உயிர்தப்பினார். இருப்பினும் அவருக்கு anti-venom மருந்துகள் வழங்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
சில மணி நேரங்கள் அவர் observationல் இருந்த நிலையில் அதன் பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.