கொவிட் தடுப்பூசியைப் பெறுவது இந்த கிறிஸ்மஸில் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு செய்யக்கூடிய, அற்புதமான விடயம் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு காணொளி மூலம் பிரதமர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில்,’ பரிசுப்பொருட்களை வாங்க இன்னும் சில மணி நேரங்கள் உள்ளபோதும், நீங்கள் இன்னும் உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் சிறந்த பரிசுகளை அளிக்கலாம்.
அது என்னவென்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான். முதல் டோஸ், இரண்டாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோசாக இருக்கலாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.
நாம் நம்மை நேசிப்பது போல் நம் அண்டை வீட்டாரையும் நேசிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
தடுப்பூசி பிரச்சாரத்திற்கு உதவியவர்களுக்கும் பண்டிகைக் காலத்தில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
சர் கீர் ஸ்டார்மர் தனது சொந்த கிறிஸ்மஸ் செய்தியில் தேசிய சுகாதார சேவை ஊழியர்களையும் பாராட்டியுள்ளார்.