245
உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த திரைப்படம் என்றால் Spider-Man: No Way Home-ஆக தான் இருக்க முடியும்.
MCU தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை வெளியான முந்தைய Spider-Man படங்களை விடவும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி இந்தியாவிலும், 17 ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெளியான Spider-Man: No Way Home திரைப்படம் பிரமாண்ட ஓப்பனிங்கை பெற்றுள்ளது.
இப்படம் வெளியாகி வார இறுதியில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 600.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் இந்தியன் மதிப்பின் படி இப்படம் 4500 கோடிகள் வசூலித்து இமாலய வசூல் சாதனை படைத்துள்ளது.