ரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க படைகளை அனுப்பப்போவதில்லை: பிரித்தானியா!

by Column Editor

ரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்பப்போவதில்லை என்று பிரித்தானிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. எனவே, அந்த நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தால் பிரித்தானியாவோ, நேட்டோ அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகளோ அங்கு படைகளை அனுப்புவதற்கு சிறிதும் வாய்ப்பில்லை.

அதன் காரணமாகத்தான், உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு ராஜீய ரீதியில் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்ற எங்களது நிலைப்பாடே, போர் தொடுப்பதிலிருந்து ரஷ்யாவைத் தடுக்கும் என்று நம்புகிறோம்’ என கூறினார்.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் அந்த நாடு மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment