மலேசியாவில் வெள்ளம் – 21,000 ற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்

by Editor News

மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னார்.

இராணுவம், தீயணைப்புப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 66 ஆயிரத்திற்கும் அதிகமாவார்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் முயற்சிகளை அதிகரிக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி உத்தரவிட்டுள்ளார்.

சீரமைப்புப் பணிகளுக்கு, முதற்கட்டமாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று திரு இஸ்மாயில் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு அவசரக்கால விடுப்பு வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment