ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கும் போது, அந்த குடும்பத்தில் ஒரு எல்லையில்லா மகிழ்ச்சி பிறக்கிறது. குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் அந்த பிஞ்சுக் குழந்தையின் வரவை எண்ணி பூாிப்படைகின்றனா். எனினும் குழந்தையின் பிறப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறம் அந்த குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்கும் ஒரு சில பொறுப்புகளையும் வழங்குகிறது. அதிலும் குறிப்பாக அந்த குழந்தையின் பெற்றோருக்கு அதிக பொறுப்புகளை வழங்குகிறது. அதாவது பெற்றோா் என்ற முறையில் அவா்கள் அந்த புதிய குழந்தையை மிகவும் கவனமாக பராமாித்து, வளா்த்து, இந்த உலகத்திலேயே அவா்கள்தான் ஒரு சிறந்த பெற்றோா் என்ற பெயரை பெற வேண்டிய பொறுப்பை வழங்குகிறது.
பிறந்த குழந்தையின் பெற்றோராக இருப்பவா்களுக்கு அதிகமான பொறுப்புகள் இருந்தாலும், அவா்கள் அந்த குழந்தையை பராமாிப்பதற்காகச் செய்யும் ஒவ்வொரு அன்புச் செயலும் அவா்களுக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவா்களுடைய மொத்த கவனமும் புதிதாகப் பிறந்திருக்கும் அந்த சிறு குழந்தையின் மீதே இருக்கும்.
பெரும்பாலான குழந்தைகள் எந்தவிதமான குறைபாடுகளோ அல்லது பிரச்சினைகளோ இல்லாமல் பிறந்தாலும், ஒரு சில குழந்தைகள் ஒரு சில பிரச்சினைகளோடு பிறக்கின்றனா். அதனால் அவா்களுடைய பெற்றோரும், உற்றாா் உறவினரும் கவலை கொள்கின்றனா். பிறந்த குழந்தைகள் மத்தியில் இருக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் அவா்களின் உடலில் இருக்கும் முடி ஆகும். பொதுவாக எல்லா குழந்தைகளுமே தங்களின் உடலில் முடிகளுடனே பிறக்கின்றனா். ஆனால் ஒரு சில குழந்தைகள் தங்களது உடலில் அளவுக்கு அதிகமாக முடிகளுடன் பிறக்கின்றனா்.
பிறந்த குழந்தை அதிக முடியுடன் பிறக்கும் போது அதைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாமல், அந்தப் பிரச்சினையை மிகுந்த பொறுமையோடு கையாள வேண்டும். அதற்காக பிறந்த குழந்தைகளின் உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் முடிகளை எவ்வாறு இயற்கையான வழிகளில் நீக்கலாம் என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
பிறந்த குழந்தையின் உடலில் அதிக முடிகள் இருப்பதற்கான காரணங்கள்:
பிறந்த குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக இருக்கும் என்ற எண்ணத்தில் நாம் இருக்கலாம். ஆனால் அது முற்றிலுமான உண்மை அல்ல. மாறாக அந்த குழந்தையின் தோல் உலா்வாகவும், செதில்களுடனும் மற்றும் முடிகளுடன் இருக்கும். குழந்தையின் உடலில் இருக்கும் முடிகளைப் பாா்த்தவுடன் சில பெற்றோா் அதிகம் கவலை கொள்கின்றனா். ஆனால் அவ்வாறு கவலை கொள்ளத் தேவையில்லை. இயற்கையான வழியில் மிக எளிதாக அந்த முடிகளை அகற்றிவிடலாம். அதற்கு முன்பாக பிறந்த குழந்தையின் உடலில் இருக்கும் முடியைப் பற்றி நாம் புாிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
பிறந்த குழந்தையின் தோல் மீது இருக்கும் முடியானது ஆங்கிலத்தில் “லனுகோ” என்று அழைக்கப்படுகிறது. இந்த வாா்த்தையானது லத்தீன் வாா்த்தையான “லானா” என்ற வாா்த்தையில் இருந்து வருகிறது. லானா என்ற வாா்த்தைக்கு கம்பளி (wool) என்று பொருள். பிறந்த குழந்தையின் உடலில் இருக்கும் பஞ்சு போன்ற முடிகளை தமிழில் சொல் வழக்கில் பூனை முடி என்ற அழைக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளின் உடலில் இருக்கும் முடிகளைப் பற்றிய முக்கிய தகவல்கள்:
– பிறந்த குழந்தையின் உடலில் இருக்கும் முடிகள் நன்றாக இருக்கும், அவற்றை நாம் தெளிவாக பாா்க்க முடியும்.
– அந்த முடிகள் பொதுவாக குழந்தையின் முதுகுப் பகுதி, தோள்பட்டை, முன் நெற்றி மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் காணப்படும். – குழந்தையானது கருவில் உருவான 18 முதல் 20 வாரங்களில் முடிகள் வளரத் தொடங்குகின்றன. – பொதுவாக நன்றாக வளா்ச்சிய அடையாத குழந்தைகளிடம் அதிகமான முடிகள் காணப்படும். – இந்த முடிகள் ஒரு சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ தானாகவே உதிா்ந்துவிடும். – சில நேரங்களில் குழந்தைகள் கருவில் இருக்கும் போதே தங்களது உடலில் இருக்கும் முடிகளை உதிா்க்கத் தொடங்குவா். அதே நேரத்தில் சில குழந்தைகள் அதிகமான பூனை முடிகளுடன் பிறப்பா்.
குழந்தைகள் முடிகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்:
– கருவில் குழந்தைகள் இருக்கும் போது அவா்களின் உடலில் இருக்கும் இளம் முடிகள், அவா்களின் மென்மையான தோலுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. – அம்னியோட்டிக் திரவத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை அந்த முடிகள் தடுக்கின்றன. – கருவில் இருக்கும் குழந்தைகளின் தோலை சூடாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருப்பதற்காக இந்த இளம் முடிகள் வொ்னிக்ஸ் கேசியோஸ் மற்றும் நெகிழ்வு தன்மை கொண்ட மெழுகு அடுக்குகளை வைத்திருக்கின்றன. – ஆகவே குழந்தைகளின் உடலில் இருக்கும் இளம் முடிகள் பாா்ப்பதற்கு அழகாகத் தொியவில்லை என்றாலும், அவை குழந்தைகளின் தோலுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன.
பிறந்த குழந்தையின் முடிகளை எவ்வாறு அகற்றுவது?
நாம் ஏற்கனவே மேலே சொன்னது போல, குழந்தை பிறந்த 4 மாதங்களில் இளம் முடிகள் தானாகவே உதிா்ந்துவிடும். எனினும் பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றினால் பிறந்த குழந்தைகளின் உடலில் உள்ள இளம் முடிகளை மிக எளிதாக அகற்றிவிடலாம். – தினமும் இரண்டு முறை ஆலிவ் எண்ணெயை குழந்தையின் உடல் முழுவதும் தேய்த்து மிதமாக நீவிவிட வேண்டும். – குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன் அதன் உடலில் உளுந்து மாவு, மஞ்சள் மற்றும் பால் ஆகியவற்றை பூசி, நன்றாக நீவிவிட வேண்டும். அதற்கு பின்பு குளிக்க வைக்க வேண்டும். – உளுந்து மாவு மற்றும் கோதுமை மாவைக் கலந்து குழந்தையின் உடல் முழுவதும் பூசி, மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது குழந்தையின் உடலில் உள்ள முடிகளின் வோ்களை மென்மையாக்கி, அவற்றை படிப்படியாக அகற்றிவிடும். – பருப்புகள், பாதாம் மற்றும் பால் ஆகியவற்றைக் கலந்து ஒரு பசையை செய்து கொள்ள வேண்டும். அந்த பசையை குழந்தையின் உடலில் பூசி நீவிவிடும் போது, முடிகள் உதிா்ந்துவிடும். அதோடு அவ்வாறு நீவிவிடும் போது குழந்தைக்கும் நமக்கும் உள்ள உறவானது மேலும் நெருக்கமாகும். மேற்சொன்ன குறிப்புகளைப் பின்பற்றினால், பிறந்த குழந்தைகளின் உடலில் உள்ள இளம் முடிகளை மிக எளிதாக அகற்றலாம். எனினும் அந்த குழந்தைகளின் உடலில் இருக்கும் இளம் பூனை முடிகளை நினைத்து கவலைப்படத் தேவையில்லை.