அனைத்து நெருங்கிய தொடர்புகளும் மீண்டும் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்: ரொபின் ஸ்வான்!

by Column Editor

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும் கொவிட் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனையைப் பெற வேண்டும் என சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘சமூகப் பரவல் நிறுவப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. தெளிவான பொது சுகாதார ஆலோசனை என்னவென்றால், நாம் இப்போது பாதுகாப்பாக செயற்பட வேண்டும்.

இப்போது வரை, பொது சுகாதார நிறுவனம் அவர்களின் நெருங்கிய தொடர்புகள் அனைவரையும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதன் மூலம் சந்தேகத்திற்குரிய ஓமிக்ரோன் தொற்றுகளை தனிப்பட்ட அடிப்படையில் நிர்வகித்து வருகிறது.

ஆனால் ஓமிக்ரோன் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த அறிவுறுத்தல் இப்போது முழு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஒகஸ்ட் மாதம் முதல் தானியங்கி சுய-தனிமைப்படுத்தல் விதிகள் தளர்த்தப்பட்டன.

ஆனால், கொவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த ஒருவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால், நீங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனையை விரைவில் பதிவு செய்ய வேண்டும் என்று சமீபத்திய ஆலோசனை கூறுகிறது.

பி.சி.ஆர். சோதனை எதிர்மறையாக இருந்தால், நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறுத்தலாம், ஆனால் பாதிக்கப்பட்ட நபருடனான உங்கள் கடைசித் தொடர்பிலிருந்து 10 நாட்கள் கடக்கும் வரை ஒவ்வொரு நாளும் சோதனையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அந்த சோதனைகளில் ஒன்று நேர்மறையாக இருந்தால், நீங்கள் மீண்டும் தனிமைப்படுத்தி மற்றொரு பி.சி.ஆர். சோதனையை பதிவு செய்ய வேண்டும்.

Related Posts

Leave a Comment