சேதமடைந்த பள்ளி கட்டடங்களை முழுமையாக இடிக்க மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 மாணவர்கள் பரிதாபமாக சிக்கி உயிரிழந்தனர். 4 மாணவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடித்தளம் இல்லாமல் சுற்றுசுவர் கட்டியதே இடிந்து விழ காரணம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ள நிலையில், பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 200 பள்ளி கட்டிடங்கள் பழமையானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கட்டிடங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார் . 120 வகுப்பறை கட்டிடங்கள், 80 கழிவறை கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் மாணவர்கள் சொல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக சேதம் அடைந்த கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.