466
காற்றுக்கென்ன வேலி இளம் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியல்.
படிப்பு, காதல், குடும்பம், பாசம், நண்பர்கள், காலேஜ் தருணம் என இளைஞர்களை கவரும் வண்ணம் எல்லாம் கலந்து கலவையாக சீரியல் உள்ளது.
அண்மையில் சீரியலின் நாயகன் மாற்றப்பட்டார், அவர் வேறொரு தொடர்களில் நடிப்பதாலும், சில மாற்றங்களை சீரியல் குழு செய்ய கூற தன்னால் முடியாது என்பதால் வெளியேறிவிட்டதாக தர்ஷன் லைவ் வீடியோவில் கூறியிருந்தார்.
அவருக்கு பதிலாக சுவாமிநாதன் என்பவர் சூர்யா வேடத்தில் நடித்து வருகிறார்.
சீரியல் தொடங்கப்பட்டு சில நேர மாற்றங்கள் நடந்துவிட்டது, அப்படி இப்போது சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாம்.
மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி இருந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் இனி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.