“இந்த நாடு இந்துக்களின் நாடு, இந்துத்துவவாதிகளின் நாடு அல்ல” என்று ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
பாஜக ஆட்சியில் மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு , பண வீக்கம் மற்றும் கொரோனா நிவாரணம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில், நாஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாபெரும் பொதுக்கூட்ட பேரணி நடைபெற்றது. முதலில் தலைநகர் டெல்லியில் இந்த மாபெரும் பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.
அதற்கு அனுமதி கிடைக்காததால், ஜெய்ப்பூருக்கு அந்த பேரணி மாற்றப்பட்டது. இந்த மாபெரும் பொதுக்கூட்ட பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி
” இந்திய அரசியலில் இந்து, இந்துத்துவவாதி என்ற இரு வார்த்தைகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது என்று கூறினார். மேலும் நான் ஒரு இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல என்றும், மகாத்மா காந்தி ஒரு இந்து…ஆனால் கோட்சே இந்துத்துவவாதியாக இருந்தார் என்றும் அவர் பேசியிருக்கிறார். அதேபோல் இந்தியா இந்துக்களின் நாடு , இந்துத்துவவாதிகளின் நாடு அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.