மலாய், பாலேடு என்று சொல்லகூடிய பொருள்கள் தான் முகத்தை பால் போன்று மென்மையாக மாற்றி விடுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பால் க்ரீம் என்னும் பாலேடு அல்லது மலாய் என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்கின்றன கடலை மாவு போன்றே பாலேடும் சிறந்த மூலப்பொருள். இது சருமத்தை அழகுப்படுத்துவதற்கு பல காலமாகவே பயன்படுத்தபட்டு வருகின்றன. இவை சருமத்துக்கு தரும் நன்மைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
எக்ஸ்ஃபோலியேட்டர்
மலாய் இயற்கையான எக்ஸ்போலியேட்டர் ஆகும். இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க கூடியது. இது சருமத்தை குறைபாடற்ற மற்றும் இளமையான சருமமாக வைத்திருக்க செய்கிறது. இதை முகத்தில் மட்டும் அல்லாமல் முழங்கைகள், முழங்கால்கல், தோள்கள் அல்லது உடலின் எந்த பகுதிகளிலும் உலர்ந்த இடத்தில் இதை தேய்த்து விட்டால் அது பல அதிசயங்களை செய்யும்.
இயற்கை முக பொலிவு
சருமம் சோர்வாக இருந்தாலும் மந்தமாக இருந்தாலும் அது புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும். சருமத்தை ஆற்றலாக வைத்திருக்க விரும்பினால் நீங்கள் பாலேடை தேர்வு செய்யலாம். உங்கள் சருமத்துக்கு பிரகாசம் தேவையெனில் நீங்கள் பாலேடை பயன்படுத்தலாம். உங்கள் சருமம் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் அதை பாலேட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஈடு செய்யும். உங்கள் முகம் பளபளப்பிலிருந்து திரும்ப செய்யும்
தோல் சிகிச்சை
முகத்தில் முகப்பரு அல்லது தோல் அழற்சி இருந்தால் அதை வெளியேற்ற அல்லது குணப்படுத்த மலாய் பாலேடு உதவும். இது தோல் எரிச்சல், சருமத்தில் திட்டு, என அனைத்தையும் போக்க உதவுகிறது. இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் முகப்பருவை வெளியேற்றுவதிலும் தோல் அழற்சியை குணப்படுத்துவதிலும் பெரும் அதிசயங்களை செய்கிறது.