கொரோனா வைரஸின் புதிய வகை ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் ஆபத்தை அதிகரித்து வருகிறது.
மும்பையில் ஒமைக்ரான் வைரசின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அதன்படி மகாராஷ்டிரா அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் டிசம்பர் 11 (இன்று) முதல் 12 (நாளை) வரை மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பேரணிகள், ஊர்வலங்கள் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இந்த உத்தரவை மீறினால், இந்திய தண்டனைச் சட்டம் 188 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 17 ஒமைக்ரான் மாறுபாட்டின் எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை, 7 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் மூன்று மும்பையிலும், 4 பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியிலும் கண்டறியப்பட்டுள்ளன.
மும்பையில் கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வயது 48, 25 மற்றும் 37 ஆகும்.
இந்த மூன்று குடிமக்களும் தான்சானியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளனர்.
பிம்ப்ரி சின்ச்வாடில் கண்டறியப்பட்ட நான்கு பாதிக்கப்பட்ட நபர்கள் நைஜீரிய பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.