கரூரில் பெற்ற மகன்கள் கைவிட்டதால் பேருந்து பயணிகள் நிழற்குடையில் 60 வயது மூதாட்டி ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளார்.
தாயின் சிறந்த கோவிலும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது முதுமொழி பல்வேறு நிகழ்வுகளிலும் உடனிருப்பவர்கள் பெற்றோர்கள் தான்.
சிறு வயது முதல் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து சமூகத்தில் சிறந்த மனிதராக திகழ வேண்டும் என்பதே அனைத்து பெற்றோரின் எதிர்பார்பாக இருக்கும் ஆனால் இன்றோ பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை ஒதுக்கி வைக்க கூடிய நிகழ்வுகள் தொடர் கதையாகியிருக்கிறது.
கரூர் மாவட்டம் எஸ்.வெள்ளாளப்பட்டி பேருந்து பயணிகள் நிழற்குடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 வயது மூதாட்டி ஒருவர் குடியேறி இருக்கிறார்.
தனது இரண்டு மகன்கள் தன்னை தவிக்க விட்ட நிலையில் தனிமையில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்த அந்த மூதாட்டி அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையில் தங்கியிருக்கிறார்.
மூதாட்டியின் பரிதாப நிலையை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூன்று வேலை உணவளித்து வருகின்றனர்.
தான் பயன்படுத்திய பாத்திரங்களுடன் குடியேறிய அவர் தன் மகன்கள் தன்னை கைவிட்டு விட்டதாக கண்கலங்க கூறுகிறார்.
ஆசை ஆசையாய் பிள்ளைகளை பெற்று அவர்களை ஆளாக்கும் பெற்றோர்களை இது போன்று தவிக்கவிடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.