கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு இரு கொரோனா தடுப்பூசிகள் மாத்திரம் போதாது என பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் ஒமிக்ரோன் மற்றும் டெல்டா வைரஸ் பகுப்பாய்வுகள், புதிய மாறுபாட்டை நிறுத்துவதில் தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டவை என்பதைக் காட்டுகின்றன.
எவ்வாறாயினும் பூஸ்டர் தடுப்பூசி, சுமார் 75% பேருக்கு எவ்வித கொரோனா அறிகுறிகளும் வராமல் தடுக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக பாதுகாப்பாக இருக்க மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது அவசியம் என பிரித்தானிய விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரித்தானியா தற்போதய நிலைமை குறித்து பிரித்தானிய இராஜாங்க செயலாளர் மைக்கேல் கோவ் கவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் மேலும் 448 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது வரை அடையாளம் காணப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 265 ஆக அதிகரித்துள்ளது.