285
பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.