முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. நாளை பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் அவர்கள் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகின்றன. அதன்பின்னர், டெல்லி கண்டோன்மென்ட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் அந்த ஹெலிகாப்டரில் சென்று இருக்கிறார்கள்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் வெலிங்கடனில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குன்னூர் காட்டேரிப் பகுதியில் பறந்த போது திடீர் என்று கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது . இந்த கோர விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இதனால் விபத்து நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிபின் ராவது உள்ளிட்ட 13 பேர் உடல்கள் ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. பிபின் ராவது அவரது மனைவியின் உடல் நாளை அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் படுகின்றன. பின்னர் டெல்லி கண்டோன்மென்ட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.