462
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில், இந்த வார தலைவராக பாவனி செயல்பட்டு வருகிறார். இவரை எதிர்த்து ஒரு கூட்டமும் செயல்பட அவரும் திட்டி தீர்த்தபடி இருக்கிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னதான் எடிட்டர்ஸ் ப்ரோமோவை மட்டும் பில்டப்பாக காட்டினாலும், நிகழ்ச்சியில் ஒரு சுவாரசியமும் இல்லை என நெட்டிசன்கள் திட்டி தீர்த்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆனாலும், தற்போது ஓரளவுக்கு சண்டை சச்சரவுகளால் டிஆர்பி சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கான அடுத்த ப்ரோமோ காட்சியில், பிக்பாஸ் வெற்றிக்கொடி கட்டு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் கொடி நடும் போட்டியில் இமான் அண்ணாச்சி தாமரையிடம் மோதிக்கொள்ளும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.