கொரோனா வைரஸ் அடுத்து, அதன் உருமாறியான ஓமிக்ரோன் வைரஸ் உலக நாடுகள் முழுவது பரவ தொடங்கி இருக்கிறது. இதனால், பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தன.
இருந்தாலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஓமிக்ரோன் பரவியுள்ளது. இதனிடையில், பிரிட்டனிலும், தென்னாப்பிரிக்காவுடனும் விமான போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் விதித்தும், அங்கு இதுவரை 160 பேர் ஓமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க பிரிட்டன் அரசு தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு இருக்கிறது.
இதைப்பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவிக்கையில், ஓமிக்ரோன் வைரஸ் பரவலை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆய்வாளர்கள், ஓமிக்ரோன் எப்படி பரவுகிறது. எந்த நிலையில் உள்ளது என்பதை பற்றி கண்டறிய ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
இதன் பின்னே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஓமிக்ரோன் கட்டுப்படுத்த புதிய விதிகளின்படி பிரிட்டன் வரும் பயணிகள் விமான புறப்படுவதற்கு முன்பே 48 மணிநேரத்திற்கு முன் கோவிட் நெகடிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என நிபந்தனையும் விதித்து இருக்கிறது.