நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை பறிக்கும் நபர்களுக்கு பிக் பாஸ் வித்தியாசமான தண்டனைகளை வழங்கி வருகிறார். அதன்படி பாவ்னிக்கு உதவியாளராக இருக்க வேண்டும் என தண்டனை வழங்கப்படுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 9 வாரங்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வாரம் கமல்ஹாசனுக்கு குணமாகிவிட்டதால் அவரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் கடந்த வாரம் சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் இருந்தனர். இவர்களில் ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.
கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் ராஜு முதலில் சேவ் செய்யப்பட்டார். மேலும் பிரியங்கா குறித்த விமர்சனங்கள் மற்றும் இமான் – நிரூப் பிரச்சனை குறித்தும் கமல் விவாதித்தார். இதனை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் பிரியங்கா, சிபி, தாமரை, இமான், அக்ஷ்ரா என ஒவ்வொருவராக சேவ் செய்யப்பட்டு வந்த நிலையில், இறுதியாக வருண், அபினய் மற்றும் அபிஷேக் இருந்தனர். இவர்களில் அபிஷேக் வெளியேறுவதாக கமல் அறிவித்தார். அதன்படி வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வந்த அபிஷேக் இரண்டாவது முறையாக வெளியேறினார்.
இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் மற்றும் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறும் காட்சிகள் இன்றைய முதல் ப்ரோமோவில் உள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸிற்கு மியூஸிக் சேர் போட்டி வைக்கப்படுகிறது. கார்டன் ஏரியாவில் போடப்பட்டு இருக்கும் சேர்களை சுற்றி போட்டியாளர்கள் ஓட வேண்டும், பாட்டு நின்றதும் எல்லோரும் வேகமாக சென்று சேரில் உட்கார வேண்டும்.
அதில் சேர் இல்லாமல் நிற்கும் நபர் தான் வெளியேற்றப்படுவார். இப்படி நடந்த டாஸ்கில் கடைசியாக அக்ஷரா மற்றும் அமீர் ஆகியோர் இருந்தனர். இறுதியில் அமீர் வெற்றி பெறுகிறார். அப்போது நாணயத்தின் பவரை பயன்படுத்தி தலைவர் பதவியை பறிக்க விருப்பமா? என பாவ்னியிடம் பிக் பாஸ் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பாவ்னி ஆம் என கூற இதனை கேட்டு அமீர் ஷாக் ஆகும் காட்சிகள் உள்ளது.
அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்ததில் இருந்து பாவ்னியிடம் தான் நல்ல நட்பாக இருந்து வருகிறார். பெரும்பாலான நேரங்கள் இருவரும் ஒன்றாக பேசி வரும் நிலையில் பாவ்னி இப்படி முடிவு செய்திருப்பது இருவருக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அக்ஷ்ரா, பாவனியை உதவியாளர் என அழைக்கிறார். நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை பறிக்கும் நபர்களுக்கு பிக் பாஸ் வித்தியாசமான தண்டனைகளை வழங்கி வருகிறார். அதன்படி பாவ்னிக்கு உதவியாளராக இருக்க வேண்டும் என தண்டனை வழங்கப்படுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அக்ஷரா, பாவ்னியை வேலை வாங்குகிறார்.
அதற்கு பாவனி, உங்களுக்கு டீ, காபி வேணுமா? உங்கள் படுக்கை அறையை சுத்தம் செய்ய வேண்டுமா? என கேட்கிறார். அதற்கு அக்ஷரா, மூன்று பெண்களுக்கு எந்த உதவி வேணுமானாலும் செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறியுள்ளார், எனவே நான் என்ன உதவி கேட்டாலும் நீங்கள் செய்து தான் ஆக வேண்டும் என்கிறார். அப்படி பார்த்தால் உங்கள் அனைத்து வேலைகளையும் என மேலே போட்டுவிடுவார்கள் என பாவ்னி கோவமாக பேசும் காட்சிகள் உள்ளது.