அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை முடி கொட்டுதல் ஆகும். இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, உடல் உஷ்ணம், மரபு போன்ற பலவித காரணங்கள் உண்டு. அதற்கு நாம் முடி கொட்டுதலை தடுத்து முடி வளர உதவும் சில உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு புரதச்சத்து மிக முக்கியம். தினமும் தேவையான அளவு புரதச்சத்து உணவினை எடுத்து வந்தால் உங்களின் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் முட்டை, பால், இறைச்சி, கொட்டை வகைகள் ஆகும்.
முடியின் வளர்ச்சிக்கு மற்றும் ஆரோக்கியமான உடலிற்கு இரும்புசத்து மிக மிக முக்கியம். தினமும் தேவையான அளவு இரும்பு சத்து உணவினை எடுத்து வந்தால் உங்களின் முடி உதிர்வு குறைந்து ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஏற்படும்.
முடியின் வளர்ச்சியை மேம்படுத்தி அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற செய்வதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரட் ஹேர் பேக்: கேரட் 1, தேங்காய் பால் சிறிதளவு, பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன். முதலில் கேரட்டை தோல் சீவி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து பின் வடிகட்டி கேரட் சாறினை மட்டும் எடுத்துக் கொள்ளவும். பின்னர் கேரட் ஜூஸுடன் சிறிதளவு தேங்காய் பால், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். கேரட் ஹேர் பேக்கினை நன்கு முடியின் வேர்கால்களில் படும்படி தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். பின்னர் ஷாம்புவினை பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ளவும்.