வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு முன்னாள் மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவரும், ஐ.எப்.எஸ். அதிகாரியுமான வெங்கடாசலம் வீடு மட்டும் அவருக்கு சொந்தமான 11 இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 13.5 லட்சம் ரொக்கமும் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 6.5 கிலோ தங்கமும் 10 கிலோ சந்தன பொருட்களும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
ரெய்டின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கிறார் வெங்கடாசலம். இதை எடப்பாடி பழனிச்சாமியிடம் சொல்லியிருக்கிறார் . அதற்கு எடப்பாடி பழனிசாமி, எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்தியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் வெங்கடாசலத்திடம், உனக்கு இதெல்லாம் தேவையா குடும்பத்திற்கு வந்த அவமானத்தை பார்த்தாயா என்று திட்டித் தீர்த்திருக்கிறார்கள். இதனால் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டு விட்டதாகவும் தகவல் .
இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதியன்று மதிய உணவு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு விரக்தியுடன் மாடிக்கு சென்ற அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
விசாரணைக்கு வரவேண்டும் என்று அழுத்தம் விடுத்ததால் தான் அவர்களுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது . முன்னாள் அமைச்சர் சி.சி.சண்முகமும் இதைத்தான் சொல்கிறார். ஆனால், எப்போது வர வாய்ப்பு இருக்கிறது என்று மட்டும்தான் அதிகாரிகள் கேட்டிருந்ததாக தகவல்.
வெங்கடாசலத்தின் தற்கொலைக்கு பின்னர், அவரது செல்போன் மற்றும் லேப் டாப்களை கைப்பற்றிய அதிகாரிகள் அதிலிருந்து முக்கியமானவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
செல்போனில் கடந்த ஒரு வருடத்தில் இருந்த கால் டீடெயில்ஸ், கடந்த மூன்று மாதத்தில் பதிவாகியுள்ள வாய்ஸ் ரெக்கார்டு, அவரது செல்போனில் இருந்த எஸ்எம்எஸ்கள், அவர் எங்கெல்லாம் கடந்த ஒரு வருடத்தில் சென்று வந்திருக்கிறார் என்பதை லொக்கேஷன் வைத்து அனைத்தையும் போலீசார் ஆராய்ந்து தகவல்களையும், ஆதாரங்களையும் திரட்டி வருவதால் மாஜிக்கள் பலரும் கலக்கல் இருப்பதாக தகவல்.