கொரோனாவின் வைரஸ் உலகமெங்கும் பரவி இருக்கும் நேரத்தில், அதன் உருமாறியான டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் உருமாற்றமடைந்தது.
இதற்கிடையில், தற்போது ஓமிக்ரோன் (omicron) என்ற புதிய வகை வைரஸ் பரவி உருமாற்றமடைந்துள்ளது. இந்த வைரஸானது தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற வைரஸ்களை விட இந்த ஓமிக்ரோன் வைரஸ் ஆனது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கர்நாடகாவில் 8 பேருக்கு பரவி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, ஓமிக்ரோன் வைரஸ் அமெரிக்காவிலும் பரவத்தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் இதுவரை 8 பேருக்கு ஓமிக்ரோன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண மேயர் தெரிவித்துள்ளார்.
அதேப்போல், கலிபோர்னியா, கொலராடோ, மினிசோடா ஆகிய 3 மாகாணங்களிலும் தலா ஒருவருக்கு ஓமிக்ரோன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.