ஒமைக்ரான் வகை வைரஸை 3 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் வசதியுடன் தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
தென் ஆப்பிரிக்க நாட்டில் வீரியத்துடன் சரசரவென பரவி வரும் மரபணு மாறிய கொரோனாவான ஒமைக்ரான் வகை வைரஸானது மீண்டும் உலக நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஒமைக்ரான் வகை வைரஸினை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு –
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் 12 அரசு ஆய்வகங்களில் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
டேக்பாத் என்ற கருவியின் உதவியுடன் இந்த 12 அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
முதல் கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்தால், அதன்பின்னர் மரபணு பகுப்பாய்வு செய்யப்படும்.
இந்த மரபணு பகுப்பாய்வு முடிவுகள் தெரிய 7 நாட்களாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.