ரசிகர்கள் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்வதற்குப் பதிலாக ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள் என்று சல்மான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் சல்மான் கானின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை இணையத்தில் வைரல் ஆனது. அதையடுத்து சல்மான் கான் தனது ரசிகர்கள் பேனர் மற்றும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக ஏழைகளிடம் அதைக் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
தண்ணீர்கூட கிடைக்காமல் நிறைய மக்கள் வெளியில் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மாதிரி [பாலை வீணாக்குவது சரியாக இல்லை. நீங்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு தயவுசெய்து தெரிவித்துக்கொள்கிறேன்” என்கிறார்.
மேலும் அவரது ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதையடுத்து “திரையரங்கிற்கு பட்டாசுகளை எடுத்து செல்ல வேண்டாம் என்று எனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் மேலும் உயிருக்கு ஆபத்தாக அமையலாம். பட்டாசுகளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். படத்தை ரசித்து அனுபவிக்க வேண்டும். ஆனால் இது மாதிரியான செயல்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்றி” என்று தெரிவித்துள்ளார்.