ஸ்டெப் 1: விரிப்பில் நேராகப் படுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும். கைகளை அழுத்தி வலது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு காலை தரையில் வைக்கவும். பின் இடது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக காலை கீழே வைக்கவும்.
ஸ்டெப் 2: பின் இரு கைகளையும் அழுத்தி இரு கால்களையும் ஒரு அடி உயர்த்தவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கால்களை தரைக்கு கொண்டு வரவும்.
ஸ்டெப் 3: பின் இரு கால்களையும் படத்தில் உள்ளதுபோல் இடுப்பு வரை உயர்த்தவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக காலை கீழே வைக்கவும். இதேபோல் இரண்டு தடவைகள் செய்ய வேண்டும்.
அர்த்த ஹாலாசனம் பலன்கள்: கணையம் நன்கு இயங்கும். வாயு பிரச்சினை சரியாகும். சுகர் சரியாகும் இடுப்பு வலி நீங்கும். இடுப்பு எலும்பு தேய்மானமாகாமல் திடமாக இயங்கும். குதி கால் வலி வராது. கால் பாத வீக்கம் வராது. குளிர்காலத்தில் குளிரை சமாளிக்கவும், கால் நரம்புகள் குளிர்காலத்தில் சிலருக்கு இழுக்கும், அந்த மாதிரி நரம்புப் பிரச்சினைகள் வராது.