தமிழ் சினிமாவில் பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின் முன்னனி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பெரியளவில் பிரபலமானவர் நடிகை சமந்தா. பல சர்ச்சை காட்சிகளில் நடித்து சமீபத்தில் அதன்காரணமாக கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு பிறகு பல நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வந்த சமந்தா ஹாலிவுட் ரெஞ்சிற்கு மாறியுள்ளார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் என படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை சமந்தா, ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் பிலிப் ஜான் என்பவரின் பிரிட்டிஷ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இரு பாலின ஈர்ப்பு கொண்டவராக நடிக்கவுள்ள சமந்தா அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைவெளியிட்டு பகிர்ந்துள்ளார். இந்தப் படம் இந்திய எழுத்தாளர் டைமேரி முராரி யின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட நாவலின் தழுவலாக எடுக்கப்பட போகிறார்களாம்.