கான்பூர் டெஸ்ட் போட்டியில் தன் அறிமுக டெஸ்ட்டில் ஆடும் ஷ்ரேயஸ் அய்யர் முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்து வரலாறு படைத்திருக்கிறார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் கண்ட 16-வது இந்திய வீரரானார் ஷ்ரேயஸ் அய்யர்.
இன்று காலை போட்டியில் இறங்கியவுடனேயே ஷ்ரேயஸ் அய்யர் கைல் ஜேமிசனை 2 பவுண்டரிகள் அடித்தார். இந்த 2வது ஷாட் அருமையான டச் ஷாட், கல்லி, பாயிண்டுக்கு இடையே பவுண்டரி பறந்தது. அதன் பிறகு ஜேமிசனை 3 பவுண்டரி அடித்து 90களுக்குள் புகுந்து 96 ரன்கள் எடுத்தார்.
கடைசியில் ஜேமிசன் பந்தைத்தான் 2 ரன்கள் எடுத்து அறிமுக டெஸ்ட்டிலேயே அருமையான இந்த இன்னிங்சில் 159 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்திருக்கிறார். கான்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1969-ம் ஆண்டு லெஜண்ட் குண்டப்பா விஸ்வநாத் தன் முதல் டெஸ்ட்டிலேயே 137 ரன்கள் எடுத்த பிறகு ஷ்ரேயஸ் அய்யர் கான்பூரில் அறிமுக டெஸ்டில் சதமெடுத்து லெஜண்ட் குண்டப்பா விஸ்வநாத்துடன் சமமாகத் திகழ்கிறார்.
உண்மையில் ஒரு உண்மையான டெஸ்ட் கிரிக்கெட்டர் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறார். இன்று புதிதாகப் பிறந்தார் புதிய டெஸ்ட் வீரர் ஷ்ரேயஸ் அய்யர்.