நடிகர் பாலசரவணன் டான் படத்திற்கான டப்பிங்கை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை லைக்காவுடன் இணைந்து எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் படப்பிடிப்பு முழுவதும் கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் நடிகர் S J சூர்யா, நடிகர் சூரி, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளனர், என டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இச்சமயத்தில் காமெடி நடிகர் பாலசரவணன் டான் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் சில தினங்களுக்கு முன்பு ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#DON DUBBING DONE…Magizhchiiii 🙌🏾🙌🏾🙌🏾@Siva_Kartikeyan @Dir_Cibi @KalaiArasu_ @SKProdOffl @Darshan_Offl @kaaliactor @sivaangi_k @RJVijayOfficial
😍😍😍😍😍 pic.twitter.com/Vhq25uQ7zB— Bala saravanan actor (@Bala_actor) November 19, 2021