கடந்த வாரம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை காரணமாக உயிரிழந்த நிலையில், தற்போது இன்று கரூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், தனியாக வெளியே சென்று பெண்கள் வீடு திரும்புவது என்பது கடினமாக மாறிவிட்டது.
வெளியே மட்டுமின்றி குடும்பம், படிக்கும் பள்ளி என அனைத்து இடங்களிலும் வன்கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனை வெளியே கூறினால் தனக்கு அசிங்கம் என்று நினைக்கும் பெண் குழந்தைகள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
குறித்த சம்பவத்திற்கு தான் மட்டுமே பொறுப்பு என்று நினைத்து பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் உண்மை மறைப்பதுடன், குடும்பத்தினர் தவறான முடிவு எடுத்துவிடுவார்களோ என்று நினைத்து தனது உயிரை மாய்த்துக் கொள்வது வேதனையை அளித்து வருகின்றது.தற்போது கரூர் மாவட்டத்தில் உயிரிழந்திருக்கும் மாணவி அவர் கைப்பட எழுதிய கடிதமும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில், Sexual Harrasment ஆல சாகுர கடைசி பொண்ணு நான் ஆ தான் இருக்கனும். என்ன யார் இந்த முடிவ எடுக்க வச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு.
இந்த பூமில வாழனும்னு ஆசபட்டேன். ஆனா இப்போ பாதிலயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா. நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேத்துக்கு help பண்ணனும்னு ஆச ஆனா முடியாதில்ல.
I Love you Amma… chithappa, manimama, ammu, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா நான் உங்ககிட்டலாம் சொல்லாம போறேன் மன்னிச்சிடுங்க.
இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. Sorry மச்சான் Sorry என்று எழுதியதோடு, தனது கையெழுத்தையும் பதிவிட்டுள்ளார். குறித்த கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை அவதானித்த மக்கள் இரங்கல் தெரிவித்ததுடன், இத்தனை உறவுகளை குறிப்பிட்டு இறப்பதற்கு தைரியம் இருந்ததற்கு இவர்களிடம் கூற தைரியம் இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் பலர் #supportgirlchild, #savegirlchild என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.