பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 46 நாட்களை கடந்து விட்ட நிலையில், இதுவரை இந்த ஷோவில் பழைய டிஆர்பி-யை எட்டவில்லை. என்னதான், போட்டியாளர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்ட்டாலும், விறுவிறுப்பு இந்த சீசன் மிகக்குறைவு தான்.
இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா என 5 போட்டியாளர்கள் இதுவரை எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் புராசஸில் 9 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதில், நாமினேஷன் லிஸ்ட்டில் பாவனி, இமான் அண்ணாச்சி, அபினய், சிபி, தாமரை செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் அக்ஷரா ரெட்டி என 9 பேர் இடம் பிடித்துள்ளனர்.
அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எப்படியும் இந்த வாரம் இசைவாணி தான் வெளியேறப்போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அபிஷேக் உள்ளே நுழைந்தார்.
இதனிடையே, இன்றைய ப்ரோமோ நிகழ்ச்சியில், கமல் புதிய வரவால் ஏற்படும் சலசலப்பு என கூற, போட்டியாளர்களிடம் ஏன் அபிஷேக் வந்ததால் மனமுடைந்து போய்விட்டீர்களா என குதர்கமாக கேட்கிறார். எப்படியும் அபிஷேக்கின் ஆட்டம் இனி ஆரம்பம் என தெரிகிறது.